செப்டம்பர் 13, 2014 சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு, டாலஸ் மெஜஸ்டிக் தியேட்டரில் மதுரை R. முரளிதரன் வழங்கும் 'சிவகாமியின் சபதம்' நாட்டிய நாடகம் நடைபெற உள்ளது. இதனை இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சியாக டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் வழங்குகிறது. அமரர் கல்கியின் வரலாற்றுக் காவியமான 'சிவகாமியின் சபதம்' மதுரை முரளிதரன் அவர்களால் உலகெங்கும் அரங்கேற்றப்பட்டு வருகிறது. அழகு தேவதையான நாயகி, காதலுக்கும் கடமைக்கும் இடையே போராடும் இளவரசன், நாட்டுப்பற்றும் புத்திசாலித்தனமும் நிறைந்த கலையார்வம் கொண்ட அரசன், சரிசமமான எதிரிநாட்டு அரசன், சூழ்ச்சிக்கார புத்தபிக்கு எனப் பல்வேறு பாத்திரங்களுடன் விறுவிறுப்பான காட்சிகள் நிறைந்தது. நூறுக்கும் மேற்பட்ட உள்ளூர் நடன, நாடகக் கலைஞர்களுடன், கலைமாமணி உமா முரளி, காவ்யலஷ்மி முரளிதரன் இருவரும் 'சிவகாமி' ஆகத் தோன்றுகிறார்கள். நவீன ஒளி அமைப்புடன் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. கண்கவரும் சிறப்பு உடையலங்காரமும் உண்டு. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்ச்சங்கத் தலைவர் கீதா அருணாச்சலம் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் செய்து வருகின்றனர்.
டிக்கெட்டுகள் முன்பதிவுக்கு: www.ticketor.com/tickets.dfwmts.org/default
சின்னமணி, டாலஸ், டெக்சஸ் |