திருட்டுக் கல்யாணம்


பாக்யராஜ், சசி ஆகியோரிடம் உதவியாளராக இருந்த ஷக்திவேலன் இயக்கும் புதியபடம் இது. ரங்காயாழி என்ற புதுமுக நாயகன் அறிமுகமாகிறார். நாயகியாக தேஜஸ்வீ அறிமுகம். முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், பசங்க செந்தி, தம்பி ராமையா, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒரு முக்கியப் பாத்திரத்தில் இயக்குனர் ஏ. வெங்கடேஷ் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் ஷக்திவேலன். "திருட்டுக்கல்யாணமா, திருக்கல்யாணமாங்கிறது முக்கியமில்ல. கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழறதுதான் முக்கியம் என்ற கருத்தை வைத்துப் படத்தை உருவாக்கியுள்ளோம்" என்கிறார் ஷக்திவேலன். அதுவுஞ் சரிதேன்.

அரவிந்த்

© TamilOnline.com