பட்டைய கெளப்பணும் பாண்டியா


நகைச்சுவையை மையமாகக் கொண்ட படம் 'பட்டைய கெளப்பணும் பாண்டியா'. விதார்த், மனிஷா யாதவ் ஜோடியுடன், முக்கிய வேடங்களில் சூரி, இமான் அண்ணாச்சி, இளவரசு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முருகராஜ் என்பவர் வில்லனாக அறிமுகமாகிறார். ஒரு மினி பஸ்ஸில் பயணிப்பவர்களையும், அந்த பஸ்ஸில் நடக்கும் நிகழ்வுகளையும் சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறது இப்படம். விதார்த் டிரைவராக நடிக்க, சூரி கண்டக்டர். இமான் அண்ணாச்சிதான் பஸ் முதலாளி. இசை: அருள்தேவ். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் SP. ராஜகுமார். பட்டையக் கெளப்புங்க பாஸூ.

அரவிந்த்

© TamilOnline.com