அகத்திணை


காதலா, பாசமா என்பதைச் சொல்ல வரும் குடும்பப் படம் அகத்திணை. சின்னத்திரையில் 'அத்திப்பூக்கள்' என்ற வெற்றித்தொடரை இயக்கிய U.P. மருது, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். நாயகனாக வர்மா அறிமுகமாக, நாயகியாக மகிமா நடிக்கிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், ஜி.எம். குமார், ஜார்ஜ், லொள்ளுசபா மனோகர், சுவாமிநாதன், நளினி, கருத்தம்மா ராஜஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை வைரமுத்து எழுத, மரியா மனோகர் இசையமைக்கிறார். தந்தை, மகள், காதலன் ஆகியோருக்கிடையே நிகழும் பாசப்போராட்டம் இந்தப் படம் என்று கிசுகிசுக்கிறார், கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com