ஆள்


விதார்த் நாயகனாக நடிக்கும் படம் ஆள். நாயகியாக கார்த்திகா ஷெட்டி அறிமுகமாகிறார். சிக்கிமில் பேராசிரியராக வேலை செய்யும் விதார்த், சென்னைக்குத் தன் காதலியையும், தாயையும் சந்திக்க வருகிறார். ஆனால் அவரை ஒரு கும்பல் கடத்திப் போய் ஒரு பயங்கர காரியத்தைச் செய்யச் சொல்கிறது. விதார்த் அதைச் செய்தாரா? ஏன் செய்யச் சொல்கிறது அந்தக் கும்பல்? சொல்ல வருகிறது 'ஆள்'. சுசி கணேசனின் உதவியாளர் ஆனந்த கிருஷ்ணா இயக்குகிறார். ஆக்‌ஷன் + த்ரில் படமான இதற்கு இசை: ஜோகன்.

அரவிந்த்

© TamilOnline.com