செப்டம்பர் 2014: ஜோக்ஸ்
ஆஹா பெங்களூரு!

பெங்களூரில் ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு கல் எறிந்தால் அது ஒரு நாய் அல்லது சாஃப்ட்வேர் எஞ்சினியர்மீது போய் விழும். நாயின் கழுத்தில் பட்டை இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால் சாஃப்ட்வேர் எஞ்சினியர் கழுத்தில் நிச்சயம் இருக்கும்.

*****


கேள்வி: பெங்களூரில் வாகன விபத்தை எப்படி ஏற்படுத்தலாம்?
பதில்: சாலை விதிகளைப் பின்பற்றுவதன் மூலம்.

*****


இளைஞர் ஒருவர் குடியிருக்க வீடு தேடிக்கொண்டு போகிறார். வீட்டுச் சொந்தக்காரரான ஒரு முதியவளைச் சந்திக்கிறார். இப்போது அவர்கள் உரையாடல்:

முதியவள்: எங்கே வேலை செய்கிறாய் மகனே?
இளைஞர்: (பெருமிதமாக) இன்ஃபோசிஸில்.
முதியவள்: ஓ! அந்த பஸ் கம்பெனியா? சாரி, நாங்கள் ஐடி மக்களுக்குத்தான் வீடு வாடகைக்குத் தருவோம்.

(பெங்களூரில் BMTCயைவிட அதிக எண்ணிக்கையில் இன்ஃபோசிஸ் பஸ்கள் ஓடுகின்றனவாம்).

*****


பெங்களூர் சாலையில் ஒருவர் சிக்னலுக்காகக் காரை நிறுத்தினால் மற்றவர்களும் நிறுத்துவார்களாம். ஏன் தெரியுமா? "என் கண்ணில் படாத போலீஸ்காரர் யாரோ அவர் கண்ணுக்குத் தெரிந்துவிட்டார்" என்ற எண்ணத்தில்.

*****


பெங்களூரில் மட்டும்தான் தூரத்தை மணிக்கணக்கில் சொல்வார்கள்.

*****


நூறு சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள் இருந்தால் அவர்களில் 90 பேர் நொந்து நூலாகிவிட்டார்கள். மீதிப் பேருக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்கிறார்கள்.

*****


பஸ் டிரைவர்கள் பிரேக்குக்குப் பதிலாக ஹார்னை உபயோகிக்குமிடம் பெங்களூரு.

*****


பிரகாஷ் ராஜகோபால்,
பெங்களூரு (முகநூல் பதிவிலிருந்து, அனுமதியுடன்)

© TamilOnline.com