சேனல்லைவின் 'CLive Mobility'
'CLive Mobility' என்ற புதிய ஆப் ஒன்றை சேனல்லைவ் வெளியிட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி ஐபேட், ஐஃபோன், ஆண்ட்ராயிடு டேப்லட், ஆண்ட்ராயிடு ஃபோன், அமேசான் ஃபயர் டி.வி., அமேசான் ஃபயர் மொபைல் (கூகிள் இடைமுகம் கொண்டது), ஆப்பிள் டி.வி. ஆகியவற்றில் உடனடியாக வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் (டவுன்லோடு) செய்துகொள்ள முடியும்.

"டி.வி.க்களில் எமது வாடிக்கையாளர்கள் உயர்தரக் காட்சியனுபவம் பெறுகிறார்கள். ஆனால் இந்த ஆப் மூலம் அவர்கள் எங்கும் எப்போதும் தமது கைக்கருவிகளில் பார்க்கும் வசதியைப் பெறுகிறார்கள்" என்கிறார் சேனல்லைவின் CEO திரு. லாரென்ஸ் பரணீதரன். "இது புரட்சிகரமானது" என்கிறார் மார்க்கெடிங் துணைத்தலைவர் ரவி அடத்ராவ்.

மேலும் அறிய: ChannelLive.tv



© TamilOnline.com