பத்தாயிரம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகை கொண்ட உலகத் தமிழ்ப் போட்டிக்கு இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் என உலகின் பலநாட்டுத் தமிழ்ப் படைப்பாளிகளின் 198 நூல்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதற்கான ஐந்து உறுப்பினர் கொண்ட நடுவர் குழு ஒருமனதாக கவிஞர் வைரமுத்துவின் 'மூன்றாம் உலகப்போர்' நூலைப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது. புவி வெப்பமயமாதல், உலகமயமாதல் குறித்துத் தமிழில் பேசப்பட்ட முக்கிய நூல் என்பதாலும், மொழிவளம், உத்தி, நடை, கரு என அனைத்திலுமே புதுமை செய்த முதற்படைப்பு என்பதாலும் இந்த நூலைத் தேர்வு செய்துள்ளதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் 5 அன்று கோலாலம்பூரில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் இப்பரிசு வழங்கப்படும்.
|