NRI செய்திகள்: பாஸ்போர்ட் திருத்துவது எளிதானது
பிறந்த தேதி, இடம் போன்றவற்றைத் தமது பாஸ்போர்ட்டில் திருத்த விரும்புவோருக்குக் கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு ஒரு வரப்பிரசாதம். பாஸ்போர்ட் வைத்திருப்பவரிடம் 'உண்மையான' பிறப்புச் சான்றிதழ் இருந்தால் அதுவே இவற்றை மாற்றப் போதுமானது என்று கோர்ட் கூறியுள்ளது. இதற்கு முன்னர் ஓர் ஜுடிஷியல் மாஜிஸ்திரேட்டிடம் அறிவிப்பு ஆணை பிறப்பித்து வாங்க வேண்டியிருந்தது. பாஸ்போர்ட் அதிகாரிகள் போதிய விசாரணை செய்து, பிறப்புச் சான்றிதழ் சந்தேகத்துக்குரியதல்ல என்பதை அறிந்துகொண்டால் இந்த அறிவிப்பாணைக்கு அவசியமில்லை என்று கோர்ட் கூறியுள்ளது.

தகவல்: V. நாகராஜன்,
ப்ரியா பதிப்பகம், சென்னை
priyapublications.com

© TamilOnline.com