தேவையான பொருட்கள் அவல் - 1 1/2 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம் கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 மிளகாய் வற்றல் - 3 பெருங்காயம் - சிறிதளவு முந்திரிப்பருப்பு - 8 கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை அவலை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துச் சற்று கரகரப்பாகப் பொடிக்கவும். வெந்நீரில் சிறிது உப்புப் போட்டு அவலில் தெளித்துப் பிசறி ஒரு துணியில் முடிச்சுக்கட்டி ஆவியில் ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், மிளகாய் தாளித்து, அதில் தேங்காயைப் போட்டுச் சிவக்க வறுத்துக் கொள்ளவும். அவலைத் தட்டில் கொட்டிக் கட்டியில்லாமல் உதிர்த்து தாளித்ததைப் போட்டு உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, முந்திரி வறுத்துப் போட்டு நன்றாகக் கலந்து சாப்பிடலாம். சுவையான காரப் புட்டு ரெடி. இதில் வேர்க்கடலை வறுத்துப் போடலாம். செய்வதும் எளிது.
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி |