அவல் இனிப்புப் புட்டு
தேவையான பொருட்கள்
அவல் - 1 1/2 கிண்ணம்
வெல்லம் - 1 கிண்ணம்
தேங்காய் (துருவியது) - 1/2 கிண்ணம்
முந்திரிப்பருப்பு - 8
ஏலக்காய் - 5
நெய் - 1/4 கிண்ணம்

செய்முறை
அவலை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்சியில் கரகரப்பாகப் பொடிக்கவும். சிறிது உப்புப் போட்டுத் தண்ணீரைச் சுட வைத்து அவலில் விட்டுப் பிசறி ஒரு துணியில் முடிச்சுக் கட்டி ஆவியில் ஐந்து நிமிடம் வைக்கவும். பிறகு எடுத்து, கட்டியில்லாமல் பொலபொலவென வைத்துக் கொண்டு, வெல்லத்தைக் கெட்டிப் பாகு வைத்து இறக்கிக் கொஞ்சம், கொஞ்சமாய்க் கரண்டியால் எடுத்து அவலில் ஊற்றிக் கலக்கவும். கலந்த பின்பு நெய்யில் முந்திரி, தேங்காய், வறுத்துப் போட்டு ஏலக்காய்த் தூள் சேர்க்கவும். நெய்யைச் சுட வைத்து மேலாக ஊற்றிக் கிளறவும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையைப் புட்டுக்கு மேலாகப் போட்டுக் கிளறிப் பரிமாறவும். இது மிகவும் சுவையானது. செய்ய எளியது.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி

© TamilOnline.com