நியூ ஜெர்சியில் அன்னை மரியின் தேர்த்திருவிழா
ஜூன் 21, 2014 அன்று, நியூ ஜெர்சி மாகாணத்தில் இயங்கி வரும் அமெரிக்கத் தமிழ் கத்தோலிக்கச் சங்கம் (www.tamilcatholicsusa.org), தூய மரியன்னையின் வருடாந்தரத் திருவிழாவை, நியூ ஜெர்சி ப்ளூ ஆர்மி (NJ Blue Army) திருத்தலத்தில் கொண்டாடியது.

நியூ ஜெர்சி, நியூ யார்க், பென்சில்வேனியா மற்றும் கனெக்டிகட் மாகாணத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழ் கத்தோலிக்கர்கள், இந்தத் திருயாத்திரை மற்றும் திருத்தேர் பவனியில் பங்குகொண்டனர். தமிழர் முறைப்படி அன்னைக்குச் சேலை அணிவித்து, தேரில் நிறுத்தி, பூக்களால் அலங்கரித்து, பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தேருக்கு தோள் கொடுக்க, அன்னை மரியின் கொடி வழிநடத்த பவனியும், திருஜெபமாலையும், சிறப்புத் திருப்பலியும், அறுசுவை விருந்துமாய் சிறப்புடன் விழா நடந்தேறியது.

மேலும் தகவலுக்கு மின்னஞ்சல்: tamilcatholicsusa@yahoo.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com