கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல் விருது விழா
ஜூன் 28, 2014 தேதியன்று கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோ ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. கனடிய எழுத்தாளர் ஷ்யாம் செல்வதுரை விருதை வழங்கினார். இந்த விருது கேடயமும் 2500 டாலர் பணப்பரிசும் கொண்டது. தமிழ் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் சூழலியல் ஆர்வலரான தியடோர் பாஸ்கரன் இந்த விருதைப் பெறும் 14வது ஆளுமையாவர்.

அன்று வழங்கப்பட்ட பிற விருதுகள்:
கீரனூர் ஜாகிர்ராஜா - புனைவு இலக்கியப் பிரிவு - 'ஜின்னாவின் டைரி' நாவல்; ஸ்ரீதரன் - 'ஸ்ரீதரன் கதைகள்' தொகுப்பு
மு.புஷ்பராஜன் - அபுனைவு இலக்கியப் பிரிவு - 'நம்பிக்கைகளுக்கு அப்பால்'
கவிஞர் இசை - கவிதைப் பிரிவு - 'சிவாஜி கணேசனின் முத்தங்கள்'
மணி மணிவண்ணன் - சுந்தர ராமசாமி நினைவு 'கணிமை விருது'
சி. மோகன் மொழிபெயர்ப்பு (ஆங்கிலத்திலிருந்து தமிழ்) - 'ஓநாய் குலச் சின்னம்' நாவல்
அனிருத்தன் வாசுதேவன் - மொழிபெயர்ப்பு (தமிழிலிருந்து ஆங்கிலம்) - One Part Woman (மாதொருபாகன்)
அருந்ததி ரொட்ரிகோ, எலினா ரொபோறஸ் - மாணவர் கட்டுரைப் போட்டி
விழாவுக்குப் பல நாடுகளிலிருந்து எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஆர்வலர்களும் வருகை தந்து சிறப்பித்தனர்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com