ஜூலை 20, 2014 அன்று மதியம், அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்து 'ஆடிப்பெருக்கு' விழாவை முன்னிட்டு, 2014 ஆண்டின் நான்காவது 'வறியோர்க்கு உணவு" நிகழ்வை
Hesed House (659 S. River Road, Aurora, IL: 60506) இல்லத்தில் நிகழ்த்தினர். சிறார்கள் பிரின்டெட், ஆகாசு, ஏரகன், சுபாசு, சாமா, சுபா ஆகியோர் தம் பெற்றோர் திருவாட்டி. பூர்ணகலா, கார்த்திகா திரு. சாக்ரடீசு, கந்தா, பாபு ஆகியோருடன் இதனைச் சிறப்புறச் செய்தனர்.
வறியோர்க்கு உணவுடன் தமிழ்மறையின் சொல்வன்மை, இடுக்கணழியாமை, ஊக்கமுடைமை, மடியின்மை ஆகிய அதிகாரங்களின் விளக்கமும், தமிழர் எங்ஙனம் வசந்தத்தை வரவேற்கிறோம் என்பதன் விளக்கமும் கூறி, தமிழர் மண்ணின் பெருமையை கூறிச்சென்ற பழம்பெரும் வெளிநாட்டறிஞர்களின் சிறப்புரைகள் அடங்கிய தொகுப்புப் புத்தகமும் அவ்வமயம் அளிக்கப்பட்டது. கூடியிருந்த வறியோர், உணவு வழங்க உறுதுணையாய் இருந்த மாணாக்கர்கள், பெற்றோர் மற்றும் அமைப்புகளுக்கு நன்றி கூறினர். நற்செயலுக்கு உதவிய Hesed நிறுவனத்தின் பொறுப்பாளர் திருவாட்டி. சிண்டி அவர்கட்கு நாம் நன்றி கூறி நிகழ்வை முடித்தோம். (இணையம்: www.hesedhouse.org)
வ.ச. பாபு, சிகாகோ, இல்லினாய்ஸ் |