செப்டம்பர் 18 - 20, 2005 நாட்களில் உலக சாந்தி ஹோமம் டெட்ராயிட்டிலுள்ள பாலாஜி வேத மையத்தில் நித்திய கல்யாணப் பெருமாளாய் வீற்றிருக்கும் குறைவில்லா கோவிந்தனின் சந்நிதியில் சுதர்சன ஹோமம் நடைபெற்றது. முதலில் வேத கோஷம் முழங்க பெருமாள் வீதிவுலா வந்தார். சாந்தி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம் ஆகியவை அடுத்தடுத்த நாட்கள் நடந்தன.
தமிழின் பக்திப் பனுவலான 'திவ்யப் பிரபந்தம்' மற்றும் 'திருப்பாவை' ஆகியவற்றை பக்தர்கள் சேர்ந்து இசைத்தபோது காதிற்கும் மனதிற்கும் ரம்மியமாக இருந்தது. வைபவத்தின் இறுதியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாடல், குழல் இசை, நடனம் இவற்றால் இறைவனைப் பள்ளிகொள்ளச் செய்தனர்.
இம்மையத்தின் முதலாம் ஆண்டு விழா அக்டோபர் மாதத்தில் நடைபெற்றபோது, குழந்தைகளுக்கு இச்சந்நிதியில் பாடவும், ஆடவும், இசைக்கருவிகளை வாசிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதே மாதம் 15-ம் தேதி ஸ்ரீகாந்த் மல்லஜோசுலா அவர்களின் இசைக் கச்சேரி நடைபெற்றது. 16-ம் தேதி சாந்தபிரகாஷ் அவர்களின் இசைக் கச்சேரி நடைபெற்றது. கோவிலை விரிவுபடுத்தும் திட்டங்கள் அமலில் உள்ளன. பக்தர்கள் அனுப்பும் காணிக்கைகளுக்கு வருமான வரி விலக்கு உண்டு.
காந்தி சுந்தர் |