இளமறி


தேசிய ஸ்கேடிங் சறுக்கு விளையாட்டு வீரர் அஜெய் நாயகனாகவும், சௌமியா நாயகியாகவும் அறிமுகமாகும் படம் இளமறி. இவர்களுடன் மூத்த நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மகன் பன்னீர் செல்வம், காதல் அருண் சுப்புராஜ், மாலதி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் விஸ்வாமித்திரன் என்பவர் அறிமுகமாகிறார். ஷாம் சங்கர் இசையமைக்கிறார், பிள்ளைகளின் இளம்பருவத்தில் பெற்றோர்கள் கவனிக்காமல் விடுவதால் ஏற்படும் பிரச்சனைகளைச் சொல்கிறதாம் படம். கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்குகிறார் எஸ். சாம். படத்தில் நகைச்சுவைக்கு முக்கிய இடம் கொடுத்துள்ளார்களாம். 'இளமறி' என்றால் செம்மறியாட்டுக்குட்டி என்று பொருள் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com