சிகண்டி


விஜய் வசந்த் நாயகனாக நடித்துப் பெரும் வரவேற்பைப் பெற்ற 'என்னமோ நடக்குது' படக்குழுவினர் 'சிகண்டி' படத்திற்காக இணைகின்றனர். "இன்றைக்குத் தெரிந்தே நாம் அனுமதிக்கும் ஒரு சமூகக் குற்றத்தைத் தோலுரித்து காட்டுகிறது இந்தப் படம். என்னமோ நடக்குது படத்தைப் போலவே விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட ஆக்‌ஷன் படமாக இருக்கும்" என்கிறார் இயக்குநர் ராஜ பாண்டி. விஜய் வசந்துடன் படத்தில் மற்றொரு நாயகனும் நடிக்க உள்ளார். அதற்கான தேர்வு நடைபெற்று வருகிறது. பிரபு, ரகுமான் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

அரவிந்த்

© TamilOnline.com