சாமியாட்டம்


ஸ்ரீகாந்த், பூஜா, முருகதாஸ் மூவரும் கூட்டுக் களவாணிகள். இவர்கள் கையில் திருட்டுப்போன தொன்மையான பிள்ளையார் சிலை கிடைக்கிறது. அந்தப் பிள்ளையார் இவர்களை என்ன பாடு படுத்துகிறார் என்பதை நகைச்சுவையாகச் சொல்ல வருகிறது 'சாமியாட்டம்'. தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற 'சுவாமி ரா ரா'தான் தமிழில் சாமியாட்டம். ஸ்ரீகாந்த் இப்படத்தைத் தயாரிப்பதுடன் நாயகனாகவும் நடிக்கிறார். நாயகியாக மும்பை மாடல் ஒருவர் நடிக்கும் இப்படத்தை மித்ரன் ஆர். ஜவஹர் இயக்குகிறார். எஸ்.எஸ்.மியூசிக் பூஜா, சம்பத், தெலுங்கு நடிகர் ஜீவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஷ்வரன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். "காணாமல் போன பிள்ளையாரின் கோணத்தில் கதை சொல்லப்படுவது தனிச்சுவை" என்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com