திருடன் போலீஸ்
தினேஷ், ஐஸ்வர்யா நாயக, நாயகியாக நடிக்கும் படம் திருடன் போலீஸ். ராஜேஷ், நிதின் சத்யா, 'நான் கடவுள்' ராஜேந்திரன், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில். கார்த்திக் இயக்குகிறார். எஸ்.பி.பி. சரண், ஜே. செல்வகுமாருடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. ஆக்‌ஷன், நகைச்சுவை கலந்து உருவாகியிருக்கும் இந்தப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. குக்கூ படத்திற்குப் பிறகு தினேஷிற்கு இது ஒரு மாறுபட்ட படமாக இருக்கும் என்கிறார், கோலிவுட் கோவிந்து.



அரவிந்த்

© TamilOnline.com