தெரியுமா?: திருக்குறள் - அரிய தகவல்கள்
திருக்குறள் முதன்முதலாக அச்சேறிய ஆண்டு - 1812

திருக்குறளில் இல்லாத எழுத்து - ஔ

குறளில் உயிருக்கு மேலாகக் கருதப்படுவது - ஒழுக்கம்

தமிழ்த் தாயின் உயிர்நிலை எனக் குறளைப் போற்றியவர் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

திருக்குறளைச் சுரங்க அறையில் வைத்துள்ள மாளிகை - கிரெம்ளின் மாளிகை, ரஷ்யா

குறள் இதுவரை எத்தனை மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது - 106

குறளுக்கு முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்

காந்தியடிகளுக்குக் குறளை அறிமுகப்படுத்தியவர் - லியோ டால்ஸ்டாய்

குறளில் "நட்பு" பற்றி வரும் குறள்களின் எண்ணிக்கை - 171

தகவல்: அரிமளம் தளவாய் நாராயணசாமி,
டெக்சஸ்

© TamilOnline.com