பியூஷ் (மஹாராஷ்டிரக் குளிர்பானம்)
தேவையான பொருட்கள்
தயிர் - ஒரு பெரிய கிண்ணம்
சர்க்கரை - 1 மேசைக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
பாதாம்பருப்பு (தோல் நீக்கியது) - 8
ஜாதிக்காய் - சிறிதளவு
குங்குமப்பூ - சிறிதளவு

செய்முறை
மிக்ஸியில் தயிர் விட்டு பாதாம்பருப்பு, உப்பு, சர்க்கரை சேர்த்துச் சுழற்றவும். பிறகு ஒரு கிண்ணம் தண்ணீர்விட்டு அதில் ஜாதிக்காய், குங்குமப்பூ சேர்க்கவும். மிக்ஸியில் ஒரு நிமிடம் அடிக்கவும். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். வெயில் காலத்துக்குச் சுவையும் சத்துமான பானம் ரெடி.

காமாட்சி ரெங்கராஜன்,
சான் ரமோன்

© TamilOnline.com