மே 11, 2014 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை (TNF), ஹூஸ்டன் கிளையின் செயலூக்க விழா மெட்ராஸ் பெவிலியனில் கொண்டாடப்பட்டது. அன்றே அன்னையர் தினமும் கொண்டாடப்பட்டது. கிளையின் சேர்மன் டாக்டர். ராம் சிவராமன் வரவேற்றுப் பேசினார். சன் டிவி 'கல்யாண மாலை' புகழ் திரு. மோகன், திருமதி. மீரா நாகராஜன் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அறக்கட்டளை ஆயுட்கால உறுப்பினர் திரு, ராஜன் ராதாகிருஷ்ணன் மற்றும் திரு. ராஜ் தியாகராஜன் இணைந்து இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். அறக்கட்டளை துணைத் தலைவரும், பொருளாளருமான திரு. பாலா பாலச்சந்திரன் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக டாக்டர். லீலா கிருஷ்ணமூர்த்தி, திரு. ராஜ் தியாகராஜன், டாக்டர் கமலா ராகவன், திரு. கோவிந்தன் சோமாஸ்கந்தன் ஆகியோரை அறிமுகப்படுத்தினார். இசை விருந்துக்குப் பிறகு செயலர் டாக்டர். G.N பிரசாத் அவர்கள் நன்றி நவின்றார்.
அன்னையர் தினக் கொண்டாட்டத்தை ஒட்டி, கணவன்மார் மனைவியரின் பெயரில் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தனர். அன்றைய தினம் $17,802 தொகை நன்கொடையாக வழங்கப்பட்டது. நிதி சேர்த்தல் ஏற்பாட்டாளர், திரு. கோவிந்தன் சோமாஸ்கந்தன், நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேல்நிலைப் பள்ளி மாணவி செல்வி. அபிநயா கோவிந்தன் அறக்கட்டளை பற்றிப் பேசியதோடு, ஹூஸ்டன் பகுதி இளைஞரணி அமைப்பாளராக இருக்கச் சம்மதித்தார். ஹூஸ்டனின் சுகர்லாந்து, பியர்லாந்து மற்றும் கேட்டி மக்களின் ஆதரவும் வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
TNF ஹூஸ்டன் பகுதி ஆலோசகர்கள் டாக்டர். அப்பன், திரு. சாம் கண்ணப்பன், டாக்டர். பத்மினி ரங்கநாதன், திரு. ராஜன் ராதாகிருஷ்ணன், ஸ்ரீ மீனாட்சி கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த திரு. ஸ்ரீகாந்த் வேணுகோபாலன், பாரதி கலை மன்றத் தலைவர் திரு. பார்த்தா கிருஷ்ணசுவாமி ஆகியோர் அறக்கட்டளையின் செயல்பாடுகளை விவாதித்தார்கள். தன்னார்வலர் டாக்டர். திருவேங்கடம் ஆறுமுகம் நிகழ்வினைப் புகைப்படத்தில் பதிவு செய்தார்.
இவ்வருடம் 5 பள்ளிகளின் செயல் திட்டத்துக்கான தேவை 6.1 லட்சம் ரூபாய். இதுவரை கிடைத்தது 1.6 லட்சம் ரூபாய். TNF ஆயுள் உறுப்பினர் ஆக விரும்புபவர்கள் www.hindutemplenh.org மூலம் உறுப்பினர் படிவத்தைப் பூர்த்தி செய்யவும். ஆயுள் உறுப்பினர் கட்டணம் - $300 (குடும்பத்திற்கு); $200 (தனிநபருக்கு). Paypal மூலமாகக் கட்டணத்தைச் செலுத்தலாம்.
தகவல்: டாக்டர். ராம் சிவராமன், பாலா பாலச்சந்திரன், ஹூஸ்டன் தமிழில்: டாக்டர். விஜயா திருவேங்கடம் |