அதிதி


நந்தா நாயகனாகவும் அனன்யா நாயகியாகவும் நடிக்கும் படம் அதிதி. நிகேஷ்ராம், தம்பிராமையா, சென்ட்ராயன், சம்பத்ராம், பாடகர் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கிய பரதன் இதையும் இயக்குகிறார். இவர் கில்லி, தூள், மதுர, ஒஸ்தி, தில், வீரம் போன்ற படங்களுக்கு வசனம் எழுதியவர். “அதிதி என்றால் தமிழில் விருந்தினன். இளம் ஜோடிகளான நந்தா, அனன்யா வாழ்க்கையில் அதிதியாக அதாவது அழையா விருந்தாளியாக நுழையும் நிகேஷ்ராம், அவர்களுக்கு என்ன மாதிரியான இடைஞ்சல்களைத் தருகிறான், அவர்கள் எப்படி மீண்டனர் என்பதுதான் படத்தின் கதை” என்கிறார். இசை: பரத்வாஜ். நல்லாயிருக்கும் போல இருக்கே.

அரவிந்த்

© TamilOnline.com