சுவாமி சின்மயானந்தர் - 'Quest'


பாமரத் தமிழர்களும் கீதையை உணரக் காரணமானவர் சுவாமி சின்மயானந்தர். அவரது கீதைப் பேருரைகள் உலகளாவிய அளவில் புகழ்பெற்றவை. அவரது பணியை உலகம் முழுதும் உள்ளோர் அறியும் பொருட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகத் தயாரிக்க உள்ளார் ஆர்.எஸ். பிரசன்னா. இவர் ஏற்கனவே 'கல்யாண சமையல் சாதம்' என்ற படத்தைத் தந்தவர். ஆங்கிலத்தில் தயாராக இருக்கும் இப்படத்தில் சின்மயானந்தராக நடிப்பவர் பிரபல கலை இயக்குநரான தோட்டா தரணி. இசை: அரோரா. படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com