தகவல் தொழில்நுட்பச் சிக்கல்களைக் கருவாக வைத்து உருவாகி வருகிறது 'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்'. காதல், த்ரில், சஸ்பென்ஸ், ஆக்ஷன் எல்லாம் கலந்து உருவாகி வரும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், நகுல், பிந்துமாதவி, ஐஸ்வர்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இயக்குனர் சரவணனிடம் இணை இயக்குனராகப் பணிபுரிந்த ராம் பிரகாஷ் ராயப்பா படத்தை இயக்குகிறார். “பூமியை நோக்கிவரும் காந்தப் புயலால் தகவல் தொழில்நுட்பம் முழுவதுமாகப் பாதிக்கப்படுகிறது. முக்கியக் கதாபாத்திரங்கள் பாதிக்கப் படுகின்றனர். இதிலிருந்து எவ்வாறு மீள்கின்றனர் என்பதே கதை” என்கிறார் இயக்குனர். ஜூலை, ஆகஸ்டில் படம் வெளியாக உள்ளது. காந்தப் புயலால் நாமும் தாக்கப்படுவோமா!
அரவிந்த் |