ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கிண்ணம்
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
பச்சைப்பட்டாணி - சிறிதளவு
கடுகு - தாளிக்க
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
க. பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - 1 கிண்ணம்

செய்முறை
ஓட்ஸ், பொட்டுக்கடலையை லேசாக வறுத்து மிக்சியில் மாவாக அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் வேண்டாம். மேலே சொன்னதுபோல தாளித்து, வேக வைத்த பச்சைப்பட்டாணி போட்டு. நீர் விட்டு உப்புப் போட்டு, கொதி வந்ததும் நெருப்பைக் குறைத்து, மாவைத் தூவிக்கொண்டே கிளறவும். அதைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து இறக்கவும். நீரிழிவு நோய் உள்ளவர்கள், வயதானவர்களுக்கு ஏற்றது.

மேலே கூறிய பிடிகொழுக்கட்டைகளை சாம்பார் அல்லது கொத்சுடன் ஒரு பிடி பிடித்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

கமலா சுவாமிநாதன்

© TamilOnline.com