கோதுமை பிடிகொழுக்கட்டை
தேவையான பொருட்கள்
சம்பா கோதுமை ரவை - 1 கிண்ணம்
சிவப்பு மிளகாய் - 2
வேர்க்கடலை - சிறிதளவு
கடுகு - தாளிக்க
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப
தண்ணீர் - 1 1/2 கிண்ணம்

செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய் போட்டு வறுத்து, பின் வேர்க்கடலையையும் போட்டு வறுக்கவும் வறுபட்டதும் காரட் துருவல் போடவும். தண்ணீர் விட்டு உப்புப் போட்டு சம்பா கோதுமை ரவையைப் போட்டுக் கிளறி, சற்று ஆறியதும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வைத்து வேக வைத்து இறக்கவும். சூடான, சத்தான சம்பா கோதுமை ரவை கொழுக்கட்டை தயார்.

கமலா சுவாமிநாதன்

© TamilOnline.com