TNF: அன்னையர் தினம்
மே 10, 2014 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் நியூ யார்க் அமைப்பு அன்னையர் தின விழாவை குவீன்ஸ் உயர்நிலை ஆசிரியர் பள்ளியில் நடத்தியது. நியூ யார்க் அமைப்பின் நிர்வாகக்குழுத் தலைவர் திருமதி. பிரஹஷிதா குப்தா வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சி வேலூர் மாவட்டப் பள்ளிகளைச் சீர்படுத்த நிதி திரட்டும் நோக்கத்தோடு நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின் திருமதி. சாவித்திரி இராமானந்து அவர்களின் மாணவர்களின் கர்நாடக இசையோடு நிகழ்ச்சிகள் தொடங்கின. பரதநாட்டியம், கிராமிய நடனம், திரையிசை ஆட்டம் ஆகிய பிரிவுகளில் நடந்த போட்டிகளில், திருமதிகள். சாவித்திரி இராமானந்து, சாதனா பராஞ்சி, சத்ய பிரதீப், தேஜஸ்வினி இராஜ், உமா பூட்டேன், மற்றும் செல்வியர். மாலினி சீனிவாசன், பூர்ணி அருணாசலம் ஆகியோரின் மாணாக்கர்கள் பங்கேற்றனர்.

திரு. இரமேஷ் இராமநாதனின் இசைக்குழுவில் மெல்வின், விஜய், பிரவீன், ஸ்ருதி வெங்கட் ,கோபால், ஷீலா, முரளி, மற்றும் எட்கர் பாடல்கள் வழங்கினர். நியூயார்க் தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் 'செய்நன்றி அறிதல்' என்னும் குறுநாடகத்தை வழங்கினர். டாக்டர். சந்திர குப்தா கவிதை வாசிக்க, துணைத்தலைவர் திரு வெங்கடேசன் சிவராமன் மற்றும் பொருளாளர் திரு பிஞ்சி ஸ்ரீனிவாசன், புரவலர்கள், நடன ஆசிரியைகள் மற்றும் நடுவர்களைக் கௌரவித்தார்கள்.

பின், 'அமெரிக்காவில் குழந்தை வளர்ப்பில் யாருக்கு அதிகப் பங்கு - தாயா? தந்தையா? என்ற தலைப்பில் சொல்லின் செல்வி திருமதி. உமையாள் முத்து அவர்கள் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. திருவாளர்கள் ஆறுமுகம் நாகப்பன், வான்மதி மயூர், சங்கரதாசு, மற்றும் பாலா சுவாமிநாதன் தாயின் பங்கே அதிகம் என்றும், திருவாளர்கள் ஆல்பிரட் தியாகராசன், தெய்வானை தீபா இராம், செல்வராசு, மற்றும் வசந்த் வெங்கடாசலம் ஆகியோர் தந்தையே என்றும் வாதாடினர்.

இந்நிகழ்ச்சி மூலம் $14,000 திரட்டப்பட்டது. அறக்கட்டளை நியூயார்க் அமைப்பின் செயலாளர் திரு. ராஜகோபால் சுப்புராமு நன்றி உரைத்தார்.

பிரஹஷிதா குப்தா,
நியூ யார்க்

© TamilOnline.com