சிகாகோ: வறியோர்க்கு உணவு
மே 18, 2014 அன்று அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் ஆகியமூன்றும் இணைந்து 2014 ஆண்டின் மூன்றாவது 'வறியோர்க்கு உணவு' நிகழ்வை Hesed House (659 S. River Road, Aurora, IL:60506) இல்லத்தில் நடத்தினர்.

சிறார்கள் முகில், சாமா, சுபாசு, ஏரகன், தக்சபிரசாத்து ஆகியோர் பெற்றோர்களுடன் பங்கேற்றனர். தவிர பிரியா, கார்த்திகா, பாலசுப்பிரமணி, கந்தா, வேலு சுப்பிரமணி, கணேசன், அரங்கநாதன் ஆகியோரும் துணை செய்தனர். நான்கு குறள் அதிகாரங்களின் விளக்கமும், பழம்பெரும் வெளிநாட்டறிஞர்கள் சிறப்புரைகளும் அடங்கிய சிறு தொகுப்பு அளிக்கப்பட்டது.

Hesed நிறுவனத்தின் பொறுப்பாளர் திருமதி. சிண்டி அவர்கட்கும், பங்களித்த மூன்று நிறுவனங்களுக்கும் நன்றி கூறி நிகழ்வினை முடித்தனர்..

வ.ச. பாபு,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com