மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா விஜயம்
2014 மே 23ம் தேதி முதல், மே 31ம் தேதி வரை, "அம்மா" ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி சியாடல், சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி ஆகிய இடங்களுக்கு வருகை தந்திருந்தார். ஜூன் 6ம் தேதி வரையில் அவர் விரிகுடாப் பகுதியில் இருக்கிறார். அதற்குப் பின்னர் அவர் விஜயம் செய்யப் போகும் இடங்களும் தேதிகளும் கீழே தரப்பட்டுள்ளன.

"வாழ்வு, இன்பமும், துன்பமும் நிறைந்ததாகும். இது கடிகாரத்தின் பெண்டுலம் போன்றது. வாழ்க்கை இன்பத்தை நோக்கிச் செல்வது அங்கேயே நிற்பதற்காக அல்ல; அங்கிருந்து துன்பத்தை நோக்கித் திரும்பிச் செல்வற்காகவே ஆகும். இவை இரண்டையும் சமமாகக் கருதி வாழச் செய்வது ஆன்மிகம். நீந்தத் தெரிந்தவனால் தான் கடலின் அலைகளை ஆனந்தமாக அனுபவிக்க முடியும். நீச்சல் தெரியாதவன், அலையில் தத்தளித்து விழுந்து விடுவான். அதனால், வாழ்வில் முன்னெறுவதற்கான வழியைக் கற்பிக்கும் ஆன்மிகத்தை அறிந்துகொண்டு வாழ்ந்தால், எந்த சூழ்நிலையிலும் புன்னகை தவழ வாழ முடியும்; நிச்சயமாக இலட்சியத்தை அடைய முடியும்” என்கிறார் ஸ்ரீ அம்மா.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும்தேதிகளும்
சான் ஃபிரான்சிஸ்கோ- வளைகுடாப் பகுதி05.28 - 06.06
லாஸ் ஏஞ்சலஸ்06.08 - 06.12
சான்டா ஃபே06.15 - 06.18
டாலஸ்06.20 - 06.21
சிகாகோ06.23 - 06.25
பாஸ்டன்06.27 - 06.29
வாஷிங்டன் டி.சி.07.01 - 07.02
நியூ யார்க்07.05 - 07.07
டொரன்டோ, கனடா07.10 - 07.13


இலவச பொதுநிகழ்ச்சிகளில் தரிசனம், ஆன்மீக சொற்பொழிவுகள், தியானம் மற்றும் பஜனைகள் நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும் - இதில், ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.

அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் குறித்து அறிய: www.amritapuri.org/activity

மேலும் விபரங்களுக்கு:
வலைமனை - www.amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com