மேக்னா சக்ரபொர்த்தி: "Tri-Allel" - கருத்தில் பரதநாட்டியம்
ஜூன் 22, 2014 குரு. விஷால் ரமணியின் மாணவி மேக்னா சக்ரபொர்த்தி 'ட்ரை-ஆல்லெல்' ((Tri-Allel) என்ற தலைப்பில் ஒரு புதுமையான நாட்டிய நிகழ்ச்சியை சாரடோகாவின் மெக்கஃபி அரங்கில் வழங்க இருக்கிறார். வால்மீகி, வியாசர், ஷேக்ஸ்பியர் போன்றவர்கள் படைத்துள்ள பாத்திரங்களைச் சார்ந்த காவிய நிகழ்ச்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்நிகழ்ச்சி. பொறாமை, மற்றும் கருத்துக் குருட்டுத்தனத்தின் விளவுகளை அலசும் இது ஒரு புதிய முயற்சி. இதை ஶ்ரீக்ருபா நாட்டியக் குழுமத்தின் நிறுவனரும், கலை இயக்குநருமான விஷால் ரமணி வடிவமைத்துள்ளார். இதன் இசை வடிவமைப்பைத் திரு. அஷோக் சுப்ரமணியம் செய்துள்ளார்.

இது ஒரு இலவச நிகழ்ச்சி. ஆயினும் 1994ல் நிறுவப்பட்ட உலகளாவிய தொண்டு நிறுவனமான Free the children அமைப்புக்காக, ரசிகர்களின் நன்கொடை வரவேற்கப்படுகிறது. இளைஞர்களைத் தன்னிறைவு, தற்சார்பு, சுய சிந்தனை கொண்டவர்களாக்கக் கற்பிக்கும் நிறுவனம் இது. மேக்னா, சாராடோகா உயர்நிலைப் பள்ளியில் சீனியர் வருட மாணவி. இவர் தனது நான்காம் வயதிலிருந்து பரதநாட்டியம் பயின்று, 2008ல் அரங்கேற்றம் செய்தார். ஸ்ரீக்ருபாவின் நாட்டிய நாடங்களுக்காகச் சென்னை மார்கழி இசை நாட்டிய விழாவிலும், பார்சிலோனா உலக நாட்டிய க்ராண்ட் ப்ரீ நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். கான்கார்டு கோவில், சங்கரா கண் அறக்கட்டளை ஆகியவற்றுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொடுத்துள்ளார்.

சுபாஷிணி,
சாரடோகா, கலிஃபோர்னியா

© TamilOnline.com