மீண்டும் அம்மன்


ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா நடிப்பில் வெளியாகி தமிழ் மற்றும் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற படம் 'அம்மன்'. அப்படத்தை இயக்கிய கோடி ராமகிருஷ்ணா இயக்கும் படம் 'மீண்டும் அம்மன்'. இதில் அம்மனாக பானுப்ரியா, நாயகனாக ரிச்சர்ட், நாயகியாக குட்டி ராதிகா நடிக்கின்றனர். இவர்களுடன் மது, நாகமணி, ஜெய்வாணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வசனம்: ARK. ராஜராஜா. இசை: கிருஷ்ணா. தனது பக்தையையும் அவள் குடும்பத்தையும் அம்மன் பாதுகாக்க, தீயசக்திகள் அந்த பக்தை குடும்பத்தை அழிக்க முயற்சிக்கின்றன. அந்தச் சக்திகளுக்கும் அம்மனுக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் படத்தின் கதை. கிராஃபிக்ஸ் கலக்கலாக உருவாகிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com