ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி


நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரத் நாயகனாக நடிக்கும் படம் 'ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி'. இதில் பரத்துடன் நந்திதா நாயகியாக நடிக்கிறார். படிக்காத கிராமத்து இளைஞனுக்கும், நன்றாகப் படித்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகு அவர்களுக்குள் நடைபெறும் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் கூறுகிறது இப்படம். நந்திதா கல்லூரி மாணவி. பரத் பரம்பரை சித்த வைத்தியர். எல்.ஜி. ரவிச்சந்திரன் இயக்க, சைமன் இசையமைக்கிறார். கன்னடத்தின் பிரபல நகைச்சுவை நடிகரான கோமல் குமார் இதில் தமிழுக்கு அறிமுகமாகிறார். படத்தில் இருபத்தோரு நகைச்சுவை நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர் என்பது கோலிவுட் கோவிந்து தரும் கொசுறு தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com