மீண்டும் ராமராஜன்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாயிருக்கிறார் நடிகர் ராமராஜன்.

எவர் கிரீன் மூவி இந்தியா நிறுவனம் 'தர்மன்' என்கிற பெயரில் புதிய படம் ஒன்றைத் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தில் ராமராஜன் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது உபரித் தகவல்.

பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றும் காவேரி மைந்தன் முதன்முதலாக இப்படத்தினை இயக்குகிறார். படத்திற்கான நாயகி இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. முக்கியப் பாத்திரம் ஒன்றில் வடிவேலு நடிக்கிறார்.

''சகோதரிகள் மீது சகோதரர்கள் பாசம் காட்டுவது போல் பல படங்கள் வந்துள்ளன. ஆனால் ஒரு சகோதரி, சகோதரர்கள் மீது வைத்திருக்கின்ற பாசத்தை முழுமையாகச் சொல்வதுதான் தர்மன்'' என்கிறார் இயக்குநர் காவேரி மைந்தன். ஒளிப்பதிவை அன்பு ஸ்ரீராம் கவனிக்க, கென்னடி இசையமைக்கிறார்.

'தர்மன்' வழியே ராமராஜன் மீண்டும் தமிழ்த்திரைப்பட உலகில் மறுபிறப்பெடுப்பாரா?

கேடிஸ்ரீ

© TamilOnline.com