தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 1 கிண்ணம் கடலை மாவு - 1/4 கிண்ணம் பாசிப்பருப்பு - 1/4 கிண்ணம் பச்சை மிளகாய் - 3 மஞ்சள்தூள் - 1/4 மேசைகரண்டி கொத்துமல்லி - சிறிதளவு தனியா - 2 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தேவைக்கேற்ப வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். தனியாவை வெறும் கடாயில் வறுத்துக் கரகரப்பாகப் பொடிக்கவும். பச்சை மிளகாய், உப்பு, கொத்துமல்லியை விழுதாக அரைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, சீரகம், மஞ்சள் தூள், வெண்ணெய், அரைத்த கொத்துமல்லி விழுது, பொடித்த தனியா, ஊற வைத்த பாசிப்பருப்பு (தண்ணீரில்லாமல்) சேர்த்து நன்கு பிசையவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
சப்பாத்திக் கல்லில் போட்டு ரொட்டிகளாக இட்டு தவாவில் போடவும். இருபுறமும் எண்ணெய் தடவி வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
இது ராஜஸ்தான் மாநில டிஷ். சற்று கனமான ரொட்டிகளாக இருக்கும். சூடாக மட்டுமே சாப்பிட முடியும்.
கிருஷ்ணவேணி, வர்ஜீனியா |