சான் ஹோசே: ஸ்ரீராஜராஜேஸ்வரி ஆலயத் திறப்பு விழா
2014 மார்ச் 28-29 நாட்களில் சான் ஹோசேயில் (2350 Paragon Drive, San Jose, CA 95131) என்ற இடத்தில் ஸ்ரீராஜராஜேஸ்வரி திருக்கோவில் திறந்து வைக்கப்பட்டது. பண்டிட் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகள், ஸ்ரீவித்யா உபாசகரான குரு ஸ்ரீ ரகுநாத சாஸ்திரிகளின் வழிகாட்டலின்படி இதனைத் தொடங்கியுள்ளார். இரண்டு நாட்களும் அபிஷேக ஆராதனைகள், ஹோமங்கள் முதலியன கிரமமாக நடந்தேறின. அன்பர்களுக்கு அர்ச்சனை, புஷ்ப கைங்கரியம், அன்னதானம், ஹோமம் எனப் பலவகையிலும் வழிபாட்டு வாய்ப்புகள் உள்ளன.

மேலும் தகவலுக்கு:
தொலைபேசி - 480.310.8619 (C), 510.598.5157
வலைமனை - www.gksastrigal.tk
மின்னஞ்சல் - priestoffremont@gmail.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com