டாலஸ்: முத்தமிழ் விழா
ஜூன் 1, 2014 அன்று நடைபெற இருக்கும் டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் விழாவில் நடிகர் விவேக், தமிழச்சி தங்கப்பாண்டியன், லேனா தமிழ்வாணன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதற்கு முன்னோடியாக ஏப்ரல் 5ம் தேதி நடந்த பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டிகளில் குழந்தைகளும் பெரியவர்களும் பங்கேற்றனர். பாட்டுப்போட்டியில் திரையிசை அல்லாத தமிழிசை பாடல்கள் மட்டுமே பாடப்பட்டது குறிப்பிடத் தக்கது. போட்டிகளில் வென்றவர்களுக்கு ஜூன் மாத விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com