தென்கலிஃபோர்னியா தமிழ் மன்றம்: மெல்லிசை
மே 18, 2014 அன்று மதியம் 3 மணிமுதல் தென்கலிஃபோர்னியா தமிழ் மன்றம் 'ஒரு மாலை இளவெயில் நேரம்-கார்த்திக் இசை அனுபவம்' என்னும் தமிழ் மெல்லிசை நிகழ்ச்சியை வழங்க இருக்கிறது. நிகழ்ச்சி Jordan High School (6500, Atlantic Avenue, Long Beach, Ca 90805) வளாகத்தில் நடைபெறும். இதில் பின்னணிப் பாடகர் கார்த்திக், சக்திஸ்ரீ கோபாலன், பிரகதி குருப்ரசாத் பங்கேற்க இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு இந்தியாவின் பிரபல இசைக்குழுவினர் பின்னணி அளிக்க இருக்கின்றனர். அமெரிக்காவின் பல இடங்களில் கலக்க இருக்கும் இவர்களைத் தென் கலிஃபோர்னியா தமிழ் மன்றம், அக்ஷயா USA, மற்றும் namastesocal.com நிறுவனங்களோடு சேர்ந்து அளிக்கிறது. இந்த நிகழ்வின் மூலமாகத் திரட்டப்படும் நிதி அக்ஷயா நிறுவனத்தின் மதுரைப் பணிகளுக்கு வழங்கப்படும். சலுகை விலையில் இரவுணவு கிடைக்கும்.

நுழைவுச்சீட்டு வாங்க: www.socaltamilmanram.org (மே 10ம் தேதிக்கு முன் வாங்கினால் சலுகை உண்டு)

மேலும் தகவலுக்கு
மின்னஞ்சல் - socaltm@gmail.com
தொலைபேசி - 562-653-6120

அனு ஸ்ரீராம்,
தென் கலிஃபோர்னியா.

© TamilOnline.com