ஹாலிவுட் கலைஞர்களும் இந்தியக் கலைஞர்களுமாகச் சேர்ந்து பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். 'வேட்டையாடு விளையாடு' படத்தின் படப்பிடிப்பு நியூயார்க் மாநகரில் ஒரு காவல் அலுவலகக் கட்டிடத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
சுற்றிலும் ஆங்கில வார்த்தைகளின் சலசலப்பு. ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்குமான இடைவெளியில் விளக்கு வெளிச்சமும், பரபரப்புமான சூழலில் ஒரு மனிதர் மட்டும் தனது நாட்குறிப்பில் வேகவேகமாக எழுதிக் கொண்டிருந்தார்.
எழுதி முடித்ததும் என்னை அழைத்து, "ஒரு கவிதை எழுதினேன்..." என்று சொல்லி என்னிடம் காட்டினார். அவரது கண்களில் முதன்முதலில் கவிதை எழுதியவரைப் போன்ற பிரகாசம். அவரே படித்துக்காண்பித்தார். அந்த ஈடுபாடு, மொழி மீதான ஆழ்ந்த காதல் இவைதான் கமல் ஹாசன்
நான் ரசித்த அந்தக் கவிதையைத் 'தென்றல்' இதழில் பிரசுரிக்க அவரது ஒப்புதலோடு இங்குத் தருகிறேன்:
என் ஜன்னல் வழிப்பார்வை கலீலியோவின் உலகைச் சதுரமாக்கியது.
அன்புடன் கமல்ஹாசன்
நியூயார்க் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து...
டி. ஜி. கே. கோவிந்தராஜன் |