மது, மாது, சூது இந்த மூன்றிலும் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் நிறையப் பேர். அவர்களுக்குப் பாடம் சொல்ல வருகிறது 'மது மாது சூது'. சிலந்தி என்ற படத்தில் வில்லனாக நடித்த சந்துரு தனது பெயரை, ராஜஷந்ரு என்று மாற்றிக்கொண்டு அவரே தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் இது. நாயகிகளாக சந்தனா, விக்னேஷா ஆகியோர் அறிமுகமாகின்றனர். "போதைக்கு அடிமையான ஓர் இளைஞனின் கதை. 2014ம் ஆண்டின் புத்தாண்டைக் கொண்டாட ஒரு ஹைடெக் பாருக்குச் செல்கிறான். அந்த பாரில் அவன் சந்திக்கும் திகிலான சம்பவங்களின் தொகுப்புதான் இந்தக் கதை" என்கிறார் இயக்குநர். ஸ்ரீனி இசையமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்திற்காக மிகப் பெரிய பாரை வாடகைக்கு எடுத்து அதில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். விரைவில் திரைக்கு வருகிறது இப்படம்.
அரவிந்த் |