கணிதப் புதிர்கள்
1) ராமு, சோமு இருவரும் சகோதரர்கள். ராமுவின் வயதையும் அவன் தந்தையின் வயதையும் பெருக்கினால் 468 வருகிறது. சோமுவின் வயதையும் அவன் தந்தையின் வயதையும் பெருக்கினால் 585 வருகிறது. ராமுவைவிட சோமு 3 வயது பெரியவன் என்றால், ராமு, சோமு, அவன் தந்தை ஆகியோரது வயதுகள் என்ன?

2) ரங்கனிடம் 30 பசுமாடுகள் இருந்தன. அவற்றில் 10 மாடுகள் தினமும் 2 லிட்டர் பால் கறக்கும். 10 மாடுகள் தினமும் 3/4 லிட்டர் பால் கொடுக்கும். மீதம் உள்ள மாடுகள் 1/4 லிட்டர் பால் மட்டுமே கொடுக்கும். ரங்கன் தனது மகன்கள் மூன்று பேருக்கும் மாடுகளின் எண்ணிக்கையும் அவற்றின் பால் அளவு எண்ணிக்கையும் சமமாக இருக்கும்படி பிரித்துக் கொடுத்தான். அது எப்படி?

3) 1, 9, 125, 49, ...... அடுத்து வரிசையில் வர வேண்டிய எண் எது, ஏன்?

4) ராஜா நான்கு இட்லிகளை இரண்டு நிமிடங்களில் சாப்பிடுவான். ராணி நான்கு இட்லிகளை ஆறு நிமிடத்தில் சாப்பிடுவாள். இருவரும் சேர்ந்து 16 இட்லிகளை எத்தனை நிமிடத்தில் சாப்பிட்டு முடிப்பர்?

5) வரிசையாக இருந்த ஆறு கூடைகளில் முதல் கூடையில் சில பழங்கள் இருந்தன. இரண்டாம் கூடையில் முதலாவதை விட ஆறு பழங்கள் அதிகமாக இருந்தன. மூன்றாம் கூடையில் இரண்டாவதை விட அதிகமாக ஆறு பழங்கள் இருந்தன. நான்காவது, ஐந்தாவது, ஆறாவது கூடையிலும் அவ்வாறே ஒன்றை விட ஒன்றாக ஆறு பழங்கள் அதிகமாக இருந்தன. மொத்த பழங்களின் எண்ணிக்கை 210 என்றால் ஒவ்வொரு கூடைகளிலும் எவ்வளவு பழங்கள் இருந்தன?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com