TAGDV: தமிழ்ப் புத்தாண்டு விழா
மே 10, 2014 அன்று, தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம் Upper Merion High School (King of Prussia, Pennsylvania) வளாகத்தில் விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. சிறுவர், சிறுமியரின் ஆடல் பாடல்களுடன் தொடங்கி, நாட்டிய சங்கமம் வழங்கும் 'பாரதியாரின் பார்வை' என்னும் பரதநாட்டிய நிகழ்ச்சியும் இதில் இடம்பெறும்.

விழாவின் சிறப்பு அம்சமான 'அமெரிக்க வாழ்க்கையில் அதிகம் அவதிப் படுபவர்கள் ஆண்களே! பெண்களே!' என்ற தலைப்பிலான நகைச்சுவைப் பட்டிமன்றத்தில் சன்டிவி புகழ் ராஜாவும், பாரதி பாஸ்கரும்பங்கேற்க உள்ளார்கள். அவர்களுடன் தமிழ் சகோதர, சகோதரிகள் எதிரெதிர் அணிகளில் பேசவுள்ளனர். சிறுவர் சிறுமியருக்கு ஓவியப் போட்டி, திருக்குறள் போட்டி, 'தமிழ்த்தேனீ' போட்டி, பெரியோர்களுக்கு சமையல் போட்டி, சிறுகதைப் போட்டியும் ஆகியவையும் நடைபெற உள்ளன.

போட்டிகள் மற்றும் பிற விவரங்களுக்குப் பார்க்க: www.tagdv.org

லதா சந்திரமௌலி,
காலேஜ்வில், பென்சில்வேனியா

© TamilOnline.com