BATM: சித்திரை திருவிழா
ஏப்ரல் 26, 2014 அன்று வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் சித்திரை விழாவைப் பாரம்பரியத் திருவிழா வடிவமைப்பில் ஃப்ரீமான்டில் உள்ள சென்டர்வில் நடுநிலைப்பள்ளியில் நடத்த உள்ளது. தமிழருக்கே உரிய இசைக்கருவிகள் கொண்ட கிராமிய இசைநிகழ்ச்சிகள், கரகம், கூத்து போன்ற நடன நிகழ்ச்சிகள் உட்படப் பலவும் இடம்பெறும். இவை தவிர, ஒரு முழு மெல்லிசை நிகழ்ச்சியும் உண்டு. இவையனைத்தும் முற்றிலும் இலவசம்.

இதுவரை காணாத ஒரு மாபெரும் விருந்து உணவரங்கம் வாயிலாகக் கிடைக்கும். வளைகுடாப் பகுதியின் பெயர்பெற்ற சிற்றுண்டி விடுதிகள் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேலான தமிழகப் பாரம்பரிய உணவு வகைகளை இதில் தயாரித்து வழங்க உள்ளார்கள். ஓர் உணவகத்தில் அதிகபட்சம் மூன்றுவகை உணவுகளை ருசிக்கலாம். இதற்கான கட்டணம் $25 மட்டுமே. சலுகை விலை பற்றிய விபரங்கள் அறிந்துகொள்ள தமிழ் மன்றத்தின் வலையகத்தில்: www.bayareatamilmanram.org/eng/ChithiRaiFEST2014.html

இவை மட்டுமன்றி குழுக்கள் முறையில் சிறப்புப் பரிசுகள் காத்திருக்கின்றன. நிகழ்ச்சிகள் தமிழர் உட்பட அனைத்துச் சமுதாயத்தினரும் கண்டு, உண்டு களிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கணேஷ் பாபு,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com