ப்ளேனோ: தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா
ஏப்ரல் 19, 2014 அன்று ப்ளேனோ தமிழ்ப்பள்ளியின் ஆண்டுவிழா, ஃப்ரிஸ்கோ ஹெரிடேஜ் உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. 2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிக்கு இது 13வது ஆண்டு விழா. நிலை 1 முதல் 7 வரை இருநூறுக்கும் அதிகமான குழந்தைகள் இங்கு தமிழ் பயின்று வருகிறார்கள். அனைத்துக் குழந்தைகளும் விழா மேடையில் பங்கேற்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ அரசர்களின் ஆட்சியின் பெருமையை நினைவுகூரும் வகையில் நடனம் மற்றும் நாடகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com