அவ்வை தமிழ் மையம்: தமிழ் இசை விழா
ஏப்ரல் 12, 2014 அன்று அவ்வை தமிழ் மையத்தின் சார்பில் தமிழிசை விழா ஒன்று ஃப்ரிஸ்கோ லிபர்டி உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் போட்டிகள் கிடையாது. குழந்தைகளின் திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் மேடையாக இவ்விழா நடத்தப்படுகிறது. 5 வயது முதல் 17 வயதுவரை உள்ள பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் பங்கேற்கலாம். பதிவுசெய்யக் கடைசி நாள் மார்ச் 31, 2014. பதிவுக் கட்டணம் கிடையாது.

தனிநபராகக் கலந்து கொள்பவர்களுக்கு 3 முதல் 4 நிமிடம்வரை வழங்கப்படும். தனிப்பட்ட குழுவாகவோ அல்லது இசைப்பள்ளிக் குழுவாகவோ பங்கேற்பவர்களுக்கு 15 முதல் 20 நிமிடம்வரை அனுமதிக்கப்படும். செவ்விசை (classical) அல்லது ஓரளவு செவ்விசை சார்ந்த தமிழ்ப் பாடல்களாக இருக்கவேண்டும். ராகம் சார்ந்த நல்ல திரையிசைப் பாடலாகவும் இருக்கலாம்.

மேலதிகத் தகவல்களுக்கு:
தொலைபேசி - 214-901-7735
மின்னஞ்சல் - info@avvaitamil.org
வலையகம் - www.avvaitamil.org

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்.

© TamilOnline.com