விரிகுடா கலைக்கூடம்: திருக்குறள் போட்டி
விரிகுடாக் கலைக்கூடம் வழங்கும் திருக்குறள் போட்டிக்கு இதுவரை 200 குழந்தைகள், 80க்கும் மேற்பட்ட தன்னார்வப் பணியாளர்கள் இணைந்துள்ளனர். திருக்குறள் ஒப்பித்தல் போட்டி ஏப்ரல் 5, 2014 அன்று காலை 8:30 மணிமுதல் மாலை 4 மணிவரை ஹார்னர் உயர்நிலைப் பள்ளியில் (Horner Junior High School, 41365 Chapel Way, Fremont CA 94538) நடைபெறும்.

வெற்றி பெற்றோருக்குப் பரிசளிப்புவிழா அதேநாள் மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை மில்பிடாஸ் ஜெயின் ஆலயத்தில் (722, S. Mainstreet CA 95035) நடைபெறும். இதில் சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்புடன், அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. அவ்வமயம் வள்ளுவர் மற்றும் குறள் பற்றிய கட்டுரைகளோடு விழாமலர் வெளியிடப்படும். அனைவரும் வருக.

திருமுடி துளசிராமன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com