பாண்டியராஜன் ஒரு விஞ்ஞானி. அவர் மூளைமாற்று அறுவை சிகிச்சை செய்வதால் ஏற்படும் நன்மைகளைக் கூறி அரசிடம் அனுமதி கேட்கிறார். அரசு அனுமதி மறுக்கிறது. அதனால் திருட்டுத்தனமாக இரு மனிதர்களின் மூளையை அவர்களுக்குத் தெரியாமல் மாற்றிவிடுகிறார். கேட்க வேண்டுமா கலாட்டாவுக்கு! அவர்களுக்கும் பாண்டியராஜனுக்கும் என்ன ஆனது என்பதைச் சொல்கிறது ஆய்வுக்கூடம். கணபதி, சத்யஸ்ரீ ஆகியோர் நாயக, நாயகிகளாக அறிமுகம் ஆகின்றனர். முக்கிய வேடங்களில் நெல்லைசிவா, செம்புலி ஜெகன், ராஜராஜன், ப்ரீத்தி, சௌந்தர், பிரபுராஜ், ரியாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரமேஷ்கிருஷ்ணா இசையமைக்க, திரைப்படக் கல்லூரி மாணவர் அன்பரசன் கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார்.
அரவிந்த் |