காதல் பஞ்சாயத்து


முற்றிலும் புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் 'காதல் பஞ்சாயத்து'. ரைட், நேகா ஆகியோர் நாயக, நாயகியாக நடிக்கின்றனர். வில்லனாக தேவராஜன் நடிக்கிறார். சூர்ய சந்திரஹாசன், சிராலி ஆகியோர் நகைச்சுவை வேடத்தில் அறிமுகமாகின்றனர். இசை: ஜான்சன். கிராமத்தில் நடக்கும் காதல் பஞ்சாயத்து செய்யும் நாயகன் பல ஜோடிகளைப் பிரிக்கிறார். ஒருநாள் அவருக்கும் காதல் வருகிறது. அந்தக் காதலை ஊர் பஞ்சாயத்து விசாரிக்கிறது. பிரிக்கிறது. அதுவரை தான் சொன்ன தீர்ப்பெல்லாம் தவறு என்றுணர்ந்த நாயகன், தான் பிரித்து வைத்த ஜோடிகளைச் சேர்த்து வைப்பதுடன் தன் காதலியையும் தேடிக் கைப்பிடிக்கிறார். இதை கலகலப்பாகச் சொல்கிறார்கள் இப்படத்தில். இயக்கம்: கலைசங்கர்.

அரவிந்த்

© TamilOnline.com