சூறையாடல்


கூத்துப்பட்டறையில் தயாரான ஸ்ரீபாலாஜி நாயகனாகவும், காயத்ரி, லீமா நாயகிகளாகவும் அறிமுகமாகும் படம் சூறையாடல். இவர்களுடன் ஜெயன், ஜாக் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியின் மகாராணி, அவள் போன்ற தொடர்களை இயக்கிய தாமரைக் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் பற்றி அவர், "எல்லா குணங்களும் நிறைந்தவன்தான் மனிதன். அதற்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையைத் தாண்டும்போதுதான் பிரச்சனை வருகிறது. காதல், காமம், கோபம் இந்த குணங்கள் கொஞ்சம் அபாயகரமானவை. அதை சரியாகக் கையாளாவிட்டால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தோட மெயின் லைன்" என்கிறார். கதை, திரைக்கதை, வசனம் : தினேஷ் பல்லத். பாடல்களை மோகன்ராஜ், நாகமானஸி எழுத, மிதுனேஷ்வர் இசையமைத்திருக்கிறார். நகைச்சுவை + காதல் + சஸ்பென்ஸ் கலந்த படம் இது என்று காதைக் கடிக்கிறார் கோலிவுட் குருவியார்.

அரவிந்த்

© TamilOnline.com