கோச்சடையான்


ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில், மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் முதல் இந்தியப் படம் 'கோச்சடையான்'. இதில் நாசர், சரத்குமார், ஆதி, ஷோபனா, ருக்மிணி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 3D படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.எஸ். ரவிகுமார் எழுத, ரஜினியின் மகள் சௌந்தர்யா அஸ்வின் இயக்கியிருக்கிறார். பாடல்களை வாலி, வைரமுத்து ஆகியோர் எழுதியுள்ளனர். இசை: ஏ.ஆர். ரஹ்மான். வரலாற்றுப் படமான இதில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்திருப்பதுடன் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார் என்கிறார் கோலிவுட் கோவிந்த். தெலுங்கு, மலையாளம் எனப் பிற மொழிகளிலும் மாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கும் இப்படம் ஏப்ரலில் திரைக்கு வருகிறது.

அரவிந்த்

© TamilOnline.com